அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட காலிஸ்தானி பயங்கரவாதியும், சீக்கியர்களுக்கான நீதிக்கான பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர், டெல்லி முதல்வர் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2014 – 2022 ல் காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களிடமிருந்து, தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த கெஜ்ரிவால் தேர்தல் நிதிக்காக 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை (அதாவது 134 கோடி) வாங்கியுள்ளதாக பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களிடமிருந்து பெற்ற நிதி உதவிக்கு ஈடாக, 2014ல் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சி அமைத்த ஐந்து மணி நேரத்திற்குள், காலிஸ்தான் பயங்கரவாதி தேவிந்தர் பால் சிங் புல்லரை விடுவிப்பதாக காலிஸ்தானி ஆதரவு குழுக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட காலிஸ்தானி நிதியைப் பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல. மார்ச் 2022 இல், சீக்கியர்கள், முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மானுக்கு கடிதம் அனுப்பினர். பஞ்சாபில் காலிஸ்தான் சார்பு சீக்கியர்களின் வாக்குகளை ஏமாற்றி ஆம் ஆத்மீ கட்சி வெற்றி பெற்றதாகக் கூறினார்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காலிஸ்தான் சார்பு சீக்கியர்களால் ஆம் ஆத்மிக்கு பெருமளவு நிதியுதவியும், ஆதரவும் கிடைத்துள்ளது என்பது வெளிப்படையான ரகசியம் என்று காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கூறினார். 2022 தேர்தல்கள் பஞ்சாப் மற்றும் SFJ க்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பொய்யாகக் கூறி காலிஸ்தான் ஆதரவு வாக்குகளின் நம்பிக்கையைப் பெற ஆம் ஆத்மி முயற்சித்ததாக அவர் கூறினார்.