ஹிந்துக்கள் அணிவகுப்பு: குலுங்கிய தலைநகர்!

ஹிந்துக்கள் அணிவகுப்பு: குலுங்கிய தலைநகர்!

Share it if you like it

ந்தியாவில் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டுமே தவிர, இஸ்லாமிய ஷரியா சட்டப்படி அல்ல என்று கோரி டெல்லியில் ஹிந்துக்கள் ஊர்வலம் நடத்தி தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால் மற்றும் மருந்தாளர் உமேஷ் கோல்ஹே ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதை கண்டித்தும், இந்தியாவில் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புப் படிதான் நடக்க வேண்டுமே தவிர, இஸ்லாமிய ஷரியா சட்டப்படி அல்ல என்று வலியுறுத்தியும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஹிந்து சங்கல்ப் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தது. அணிவகுப்பு அமைதியாகச் செல்வதை உறுதி செய்யும் வகையில் பாரகாம்பா சாலை, ஃபிரோஸ் ஷா சாலை, டால்ஸ்டாய் மார்க், ஜன்பத், சன்சாத் மார்க், படேல் சௌக் மற்றும் பிற இடங்களில் டெல்லி காவல்துறையினரால் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த அணிவகுப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய இந்து வாஹினி, சேவாபாரதி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அணிவகுப்பு இன்று காலை மண்டி ஹவுஸிலிருந்து துவங்கி ஜந்தர் மந்தர் வரை நடந்தது. அணிவகுப்பில் டெல்லி பிரிவு தலைவர் ஆதேஷ் குப்தா, கபில் மிஸ்ரா, தஜிந்தர் பால் சிங் பக்கா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு குறித்து பேசிய மிஸ்ரா, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் நாடு இயங்குமே தவிர, ஷரியா சட்டப்படி அல்ல என்பதை உறுதி செய்வதற்காகவே நடத்தப்படுகிறது. இது வெறும் கோஷம் அல்ல. இதுதான் ஹிந்து இயக்கங்களின் செய்தி. இங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஜன் மெய்ன் ரோஷ் பீ ஹை, ஆக்ரோஷ் பீ ஹை” என்றார். அணிவகுப்பின்போது, உதய்பூர் டெய்லர் கன்ஹையா லால் மற்றும் அமராவதி மருந்தாளுனர் உமேஷ் கோல்ஹே ஆகியோரைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் அலோக் குமார் பேசுகையில், “விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, யாருக்காவது அச்சுறுத்தல் வந்தால் பயப்படத் தேவையில்லை. பஜ்ரங்தளத்தை அழைக்கவும், அவர்கள் உங்களுடன் காவல் நிலையத்திற்கு வருவார்கள். தற்காப்புக்கான உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. இன்றைக்குப் பிறகு, மக்கள் மசூதியை விட்டு வெளியேறி, கல் எறிதல் அல்லது தீவைத்து எரித்தல் அல்லது வன்முறையில் ஈடுபட்டால், ஹிந்து சமாஜ் ஒன்று சேர்ந்து இந்த தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தும். பஜ்ரங்தள் சமூகத்தின் பாதுகாப்பிற்காக நிற்கும். நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பாதுகாப்பதற்கும், ஜிஹாத் மற்றும் பயங்கரவாதத்தின் தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்ததுடன் இக்கூட்டம் நிறைவு பெறுகிறது” என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில், தரவு அறிவியல் ஆலோசகரான சௌரப் சர்மாவும் ஒருவர். அவர் கூறுகையில், “நான் இங்கு ஹிந்து ஒற்றுமையைக் காட்ட வந்தேன். இவ்வளவு காலமும் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் முளையிலேயே நசுக்க வேண்டும். தலை துண்டிக்கப்பட்டது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றபடி, அணிவகுப்பில் பங்கேற்ற எந்தக் குழுக்களுடனும் எனக்கு தொடர்பில்லை” என்றார். ஹிந்து வாஹினியின் ஒரு அங்கமான மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் கல்பனா கிரி, “கன்னையாவையும் உமேஷையும் கொன்றிருக்கிறார்கள். ஹிந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கொடுமை நடந்தால்தான் மக்கள் ஒன்று கூடுவார்கள்போல” என்றார் விரக்தியுடன். இதில் கலந்து கொண்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் எல்.எல்.எம். மாணவர் மணீஷ் குமார் கூறுகையில், “சமாஜத்தை உடைக்கும் நபர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், சமுதாயத்தை ஒருங்கிணைக்க இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் நாம் இயங்க வேண்டும்” என்றார்.

ஆக ஹிந்துக்களின் எழுச்சி ஆரம்பித்து விட்டது!


Share it if you like it