சாதி பாகுபாட்டால் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பா ? விடியல் ஆட்சியில் அவலம் !

சாதி பாகுபாட்டால் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பா ? விடியல் ஆட்சியில் அவலம் !

Share it if you like it

கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு இசைப்பள்ளியில் தவில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கா.ஜெயராஜ். இவருக்கு (ஜூலை 31) டன் பணி ஓய்வு முடிந்ததால், கடந்த மாதமே மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, மேலும் ஒரு கல்வியாண்டு பணி நீட்டிப்பு வழங்க அனைத்து விண்ணப்பங்களையும் தமிழக கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விண்ணப்பதின் மீது நடவடிக்கை எடுக்காமல் கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, (ஜூலை 31) வரை ஜெயராஜிற்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான எந்த தகவலும் இசைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கா.ஜெயராஜ் ஓய்வு பெறும் நாளில், பணி நீட்டிப்பு தமிழக அரசு வழங்கவில்லை என தகவல் தெரிந்ததும், பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய பேரவை கலை பாண்பாட்டுத்துறை ஆசிரியரும், ஊழியர் பேரவை மாநில பொதுச் செயலாளருமான அய்யனார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இசைப்பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், மாணவர்களின் கல்வி நலனைப் பொறுத்தும் பணி நீட்டிப்பு செய்யலாம் என ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனைப் பின்பற்றி கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் செந்தில், கரூர் மாவட்ட இசை பள்ளி தலைமையாசிரியருக்கு எவ்வித கடிதமும் அனுப்பாததால், பள்ளியில் தவில் கற்கும் 15 மாணவர்கள் ஆசிரியர் இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், அரசு ஆசிரியர்களை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், கலை பண்பாட்டுத் துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் செயல்படுவதுடன் தொடர்ந்து சாதியப் பாகுபாடு கடைபிடிப்பது தொடர்ந்து வருகிறது. இதனை ஆசிரியர் ஊழியர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியரின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசை ஏற்க வேண்டும். உடனடியாக பணி நீட்டிப்பு ஆணையை வழங்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசு ஊழியர் அய்க்கியப்பேரவை கலைபண்பாட்டுத்துறை ஆசிரியர் ஊழியர் பேரவை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்” என தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *