சிவபெருமானை தரிசிக்க அனுமதி மறுப்பு ? சீறிய வானதி சீனிவாசன் !

சிவபெருமானை தரிசிக்க அனுமதி மறுப்பு ? சீறிய வானதி சீனிவாசன் !

Share it if you like it

வெள்ளியங்கிரி தலத்தில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி. இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகினறனர். தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட கேட்டுக்கொள்கிறேன்.


Share it if you like it