Share it if you like it
சண்டிகர் மாநகராட்சியில் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறுதேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் குல்ஜீத் சிங் சந்துவும், காங்கிரஸ் சார்பில் குர்பிரீத் காபியும் மூத்த துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும் பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மாவும், காங்கிரஸ் சார்பில் நிர்மலா தேவியும் துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில், 35 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல, துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜிந்தர் சர்மாவும் அதே வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
Share it if you like it