டிசம்பர் 18 ஆம் தேதி, பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தின் துணைக் கண்காணிப்பாளர் ஃபைஸ் அகமது கான், பெண் ஆய்வாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஃபைஸ் அகமது கான் மொஹானியாவுக்கு துணை-பிரிவு போலீஸ் அதிகாரியாக (SDPO) நியமிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைமூர் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.அதில் ஃபைஸ் அகமது கான் தனக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து ஆபாசமான செய்திகளை அனுப்பி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும், உயர் பதவி தருவதாகவும் கூறி பாலியல் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பெண் போலீஸ் அதிகாரி, குற்றவாளிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் அதிகாரிகளிடம் சமர்பித்தார். பிறகு கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் மோகன் சர்மா, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை அமைத்தார். அந்த உள் கண்காணிப்புக் குழுவில் பெண் காவல் நிலையப் பொறுப்பாளர் பூனம் குமாரி, மூத்த துணை ஆட்சியர் சவிதா குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ஷ்ரத்தா சுமன், சப்-இன்ஸ்பெக்டர் சுபாங்கி, காவலர் சந்தியா குமாரி, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவானது சாட்சியங்களை ஆய்வு செய்து, இரு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்றது. குற்றவாளி பிடிபடாமல் இருக்க தனது வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் செய்திகளை முற்றிலுமாக அளித்துள்ளார். ஆயினும், இறுதி விசாரணை அறிக்கையில் கூற்றுகள் உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த அறிக்கையை ஷாஹாபாத் ரேஞ்ச் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) நவீன் சந்திர ஜாவுக்கு எஸ்பி அனுப்பினார். இதையடுத்து, அரசு தலையிட்டு, ஃபைஸ் அகமது கானை சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பான அறிவிப்பையும் பீகார் அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
source : opindia