மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கோவில்களில் மேம்பாட்டு பணிகள் !

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கோவில்களில் மேம்பாட்டு பணிகள் !

Share it if you like it

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள புனித யாத்திரை தலங்களை மேம்படுத்துவதற்காக “பிரசாத்” (Pilgrimage Rejuvenation and Spiritual Augmentation Drive) (PRASHAD) (புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம்) (பிரஷாத்)
திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசின் பிரசாத் திட்டம் கீழ் திங்களூர் கைலாசநாதர் கோவில், வைதீஸ்வரன் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் வில்லிட 8 நவக்கிரக கோவில்களில் மேம்பாட்டு பணிகள் நடைப்பெற இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

பிரசாத் திட்டத்தின் பயன்கள் சிலவற்றை காண்போம் :-

மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் :

சுற்றுலாத் திறன் உள்ள பகுதிகளில் வசிக்கும் பாமர மக்கள், சிறந்த சாலைகள், போக்குவரத்து வசதிகள், சுகாதாரம் மற்றும் பயன்பாடுகள் போன்ற மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்ப வசதிகளால் பயனடைகின்றனர். இந்த மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான அனுபவத்தையும் வழங்குகிறது.

வேலைவாய்ப்பு வசதி :

பிரஷாத் திட்டத்தின் கீழ் உள்ளூர்வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. விருந்தோம்பல், சுற்றுலா வழிகாட்டுதல், போக்குவரத்து, கைவினைப்பொருட்கள் மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது.

வருமான வசதி :

சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு சிறந்த வருமானத்தை உருவாக்குகின்றன. மேலும் உள்ளூர் கைவினை கலைஞர்கள், விற்பனையாளர்கள், சிறு வணிகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக அதிக வருமானம் கிடைக்கவும் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கும் வழிவகை செய்கிறது.

சுற்றுலா வருவாய் அதிகரிப்பு :

பிரசாத் திட்டத்தால் சுற்றுலா தலம் வளர்ச்சியடைந்து, வருவாயையும் அதிகரிக்கிறது. மேலும் இது உள்ளூர் பொருளாதாரத்தில் பல மடங்கு மேம்படுத்தும். உணவு மற்றும் பானங்கள், சில்லறை விற்பனை மற்றும் போக்குவரத்து போன்ற துணைத் துறைகளில் வளர்ச்சியைத் தூண்டுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *