உலகப்பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீடிவி என்னும் ஊடகமானது தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், திருவள்ளுவர் பிறந்த நாளான வைகாசி அனுஷத்தை தமிழக அரசும் திராவிட கூட்டங்களும் கொண்டாடாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி அதன் கீழ், தமிழ் துரோகிகள், அடையாள மோசடியாளர்கள், மிஷனரி ஏஜெண்டு என மூன்று வார்த்தைகளை கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்ரீடிவி கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டது. அதில், தமிழ் துரோகிகள் என்னும் விருப்பத்தை 20 சதவீதம் பேரும், அடையாள மோசடியாளர்கள் என்னும் விருப்பத்தை 20 சதவீதம் பேரும், மிஷனரி ஏஜெண்டு என்னும் விருப்பத்தை 60 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பின் முடிவானது திமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.