காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஹனுமன் கோவிலின் வாசலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் புகைப்படத்தை ஒட்டி வைத்துள்ளனர். பின்னர் பக்தர்கள் அந்த புகைப்படத்தின் மேல் கால் வைத்து கோவிலின் உள்ளே நுழைந்து கடவுளை தரிசிக்கின்றனர்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவையில் கடவுள் சிவன் படத்தை காட்டிப் பேசியது . கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியது.
முன்னதாக கடந்த மே மாதத்தில் பிரச்சார மேடை ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மாபெரும் ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்த சத்ரபதி சிவாஜி சிலையை அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் அந்த சிலையை கையில் வாங்க மறுத்துள்ளார். பிறகு அந்த சிலையில் கொண்டு வந்தவர் அங்கிருந்த மேஜையில் வைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் அந்த சிலையை அப்புறப்படுத்த சொல்கிறார். இந்த காணொளியானது தற்போது பெரும் சர்ச்சையானது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.