ஜவுளிக்கடை கலெக்சன் ஏஜென்டுக்கு கும்மாங்குத்து: தி.மு.க. ஒ.செயலாளரின் அடாவடி… வீடியோ வைரல்!

ஜவுளிக்கடை கலெக்சன் ஏஜென்டுக்கு கும்மாங்குத்து: தி.மு.க. ஒ.செயலாளரின் அடாவடி… வீடியோ வைரல்!

Share it if you like it

கொடுத்த ஜவுளிக்கு பணம் கேட்டு வந்த கலெக்சன் ஏஜென்டை தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அடியாட்களை வைத்து தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் அடிலம் அன்பழகன். வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். தனது கடைக்குத் தேவையான ஜவுளிகளை போத்தீஸ் சில்க்ஸ் மற்றும் மாட்டலாம்பட்டியிலுள்ள வணிகர்களிடம் வாங்கி வந்திருக்கிறார். அந்த வகையில், போத்தீஸ் சில்க்ஸுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் தரவேண்டி இருக்கிறதாம். அதேபோல, மாட்டலாம்பட்டியிலுள்ள வணிகர்களிடம் வாங்கிய ஜவுளிகளுக்கும் லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறாராம்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், ஜவுளி வாங்கிய பணத்தை கேட்டு வருபவர்களிடம் இன்று போய் நாளை வா என்று காலம் கடத்தி வருகிறாராம். மேலும், தனக்கு அமைச்சரின் ஆதரவு இருப்பதால், பணம் கேட்டு வருபவர்களிடம், பணத்தை தர முடியாது, முடிந்ததை பார்த்துக் கொள் என்று அடியாட்களை வைத்து மீரட்டுகிறாராம். இந்த சூழலில், பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த மாட்டலாம்பட்டி வணிகர் ஒருவரை, அடலம் அன்பழகன் தனது அடியாட்களை ஏவிவிட்டு சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும், தி.மு.க. ஒன்றியச் செயலாளரின் செயலை கண்டிப்பதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


Share it if you like it