ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்தும் , வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறை எளிமைப்படுத்துவது குறித்து முதலில் ஆலோசிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்து திட்டங்களைக் கூட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாக தான் ஆலோசிப்பதாக கூறினார்.
சமூக வலைதளங்களின் பங்களிப்பு இன்று அதிகரித்து வருகிறது , பொருளாதார நிபுணர்கள் பலரும் அதில் பேசுகின்றனர். ஆனால் 10 நபர்கள் சரியான தகவலை கூறுகின்றனர் என்றால் 100 நபர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.
revenue bar association போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பொருளாதாரம் , முதலீடு குறித்து சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் செப்டமர் 9 ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகளின் கேள்விக்கு தமிழில் பதில் அளித்த அமைச்சர் பேசியதாவது :
டிஜிட்டல் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு இருக்கும் உறவுகளுக்கு உடனடியாக பணம் அனுப்பும் வகையில் வளர்ச்சி இருக்கிறது. ஆப்பிள் தொலைபேசி இல்லை என்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வளர்ச்சி தான் காரணம் என்றார்.
மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தார். டிஜிட்டல் புரட்சி தான் இன்று வளர்ச்சியின் அடையாளத்துக்கு ஒரு காரணம் என்றும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
அதேபோல் நான் ஊறுகாய் போட்டவர் என பேசுகின்றனர். ஆனால் ஊறுகாய் போடுவது தாழ்வானது கிடையாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.