ஒகேனக்கல் அருவி இந்தியாவின் மிக அழகான ஒகேனக்கல் அருவிகளில் ஒன்றாகும். தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவில் கர்நாடக எல்லையில் ஒகேனக்கல் அமைந்துள்ளது. இந்த இடத்தின் அற்புதமான காட்சிகள் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மேலும் சுத்தமான காற்று, அழகு கொஞ்சும் இயற்கை காட்சிகள், அங்கு கிடைக்கும் மீன்கள், பரிசல், வன உயிரின பூங்காக்கள் என தினமும் ஒகேனக்கல் அருவியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைந்துள்ளது. சுற்றுலா வரும் மக்கள் அந்த பாலத்தில் நின்று அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்து செல்வார்கள். இந்தநிலையில் அந்த தொங்கு பாலமானது கடந்த இரண்டு மாதங்களாக சிதிலமடைந்து சின்னாபின்னமாக உள்ளது. இதனால் ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். சேதாரமடைந்த பாலத்தை சரி செய்யாமல் கதியற்று தொங்கு பாலம் கிடக்கிறது. இதனால் சுற்றுலாத்துறை நிர்வாகமானது நடவடிக்கை எடுத்து பாலத்தை சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.