நிழற்குடையால் அசிங்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்!

நிழற்குடையால் அசிங்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்!

Share it if you like it

நிழற்குடையை சீரமைக்காமலேயே சீரமைத்ததாக பிளக்ஸ் போர்டு வைத்து அசிங்கப்பட்டிருக்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

தமிழக உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. இவர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர். இந்த சூழலில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், மேற்படி நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எந்த பயனும் இல்லாததால், தங்களது தொகுதி எம்.எல்.ஏ.வும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணியிடம் சொல்லி, நிழற்குடையை சீரமைத்துத் தருமாறு கோரி இருக்கிறார்கள்.

இதையடுத்து, அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் சிறுநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால், நீண்ட நாட்களாகியும் பேருந்து நிறுத்தத்தை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த சூழலில், நேற்று காலையில் பேருந்து நிழற்குடைக்கு வந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அந்த பேருந்து நிழற்குடையில் திடீரென புதிதாக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதில், அமைச்சர் சக்கரபாணியின் தொகுதி நிதியிலிருந்து சீரமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை என்று பளிச்சென பிரின்ட் செய்யப்பட்டிருந்ததுதான்.

இதையடுத்து, பணிகள் மேற்கொள்ளாமலேயே தி.மு.க.வினரும், அதிகாரிகளும் பணத்தை சுருட்டி விட்டதாக தகவல் பரவியது. இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், அந்த பிளக்ஸ் போர்டோடு, பயணியர் நிழற்குடையும் சேர்த்து போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த போட்டோ வைரலான நிலையில், நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் தி.மு.க.வினரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதையடுத்து, பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலையில், காரில் ஆட்களை அழைத்து வந்த தி.மு.க.வினர், பயணியர் நிழற்குடையை சீரமைக்காமலேயே வெறும் பெயின்ட்டை மட்டும் அடித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். தி.மு.க.வினரின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.


Share it if you like it