இந்தியாவில் பின் தங்கிய மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பொழுது, கல்வியில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலம் தமிழகம் என்று கூறும் நாம் தான் நீட் தேர்விற்கு தடை வேண்டும் என்று கேட்பது கவலைக்குறிய செயல் என்று கல்வியாளர்கள் முதல் பல சமூக ஆர்வலர்கள் வரை தமது எண்ணங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவ கல்லூரி என்னும் போர்வையில் ஏழை மாணவர்களிடம் பணம் பறிக்க துடிக்கும் முதலைகளுக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது என்பது நிதர்சனம். தமிழகத்தில் 23-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளது, அவர்களின் வருமானத்திற்கு நீட் தேர்வு தடையாக உள்ளது என்று அண்மையில் பிரபல கல்வியாளர் காயத்ரி அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் உள்ள பிரபல ஊடகங்கள் கூட காயத்ரி போன்றவர்களின் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல். மக்களிடம் குழப்பத்தையும், மாணவர்களிடம் பயத்தையும், நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்களுக்கு மட்டுமே இன்று வரை அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.
ஏழை மருத்துவ மாணவர்கள் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள். இந்த பணம் படைத்த முதலைகள் முன்பு என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே ஜென்டில் மேன் என்னும் திரைப்படம் மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்து கூறியுள்ளார் பிரபல இயக்குனர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.