நிவாரணத் தொகை வழங்குவதில் பாரபட்சம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு !

நிவாரணத் தொகை வழங்குவதில் பாரபட்சம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு !

Share it if you like it

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ரூபாயும், மற்ற இடங்களில் ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட திசையன்விளையை அடுத்த எறும்பியூர் கிராமத்தில் அரசின் நிவாரணத் தொகையை பெற 100-க்கும் மேற்பட்ட மக்கள் நியாயவிலைக் கடையில் குவிந்தனர்.

ஆனால் அப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள், மற்ற இடங்களை போன்று தங்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நிவாரணத் தொகையை பெறாமல் திரும்பிச் சென்றனர்.

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசின் நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


Share it if you like it