வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் INDIA கூட்டணியில் உள்ளார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இதன்காரணமாக டெல்லி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாமா என்பது குறித்தான ஆலோசனையும் மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு துண்டுசீட்டு இல்லாமல் பேசமாட்டார். துண்டுசீட்டு இருந்தாலே வாய் குழறும். ஸ்டாலினுக்கு தான் இப்படி என்றால் இவரது மகன் உதயநிதி இவருக்கு மேல். பிரச்சாரத்தில் பேசும் போது அரியலூர் மாணவி ஒருவர் 1200 மதிப்பெண்ணிற்கு 1720 மதிப்பெண்கள் எடுத்தார் உளறிய காணொளி சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தில் பிறந்திருந்தாலும் தமிழின் மேல் மாண்பையும் சிறப்பையும் உணர்ந்து எங்கு சென்றாலும் தமிழ் மொழியை பெருமை படுத்துகிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று மக்களை தவறான வழியில் திசைதிருப்பி ஹிந்தி கற்றுக்கொள்ள விடாமல் செய்துவிட்டு இவர்களின் பிள்ளைகளை மட்டும் ஹிந்தி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கச் வைப்பார்கள். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர்.