நீலகிரி தி மு க வேட்பாளர் ஆ.ராசா விற்கு ஆதரவாக அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரும், நீலகிரி மாவட்ட ஆட்சியருமான அருணா அவர்கள் நடந்து கொள்வதாகவும், தன்னை பணியாற்ற விடாமல் அழுத்தம் கொடுப்பதாகவும், தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது எனவும் அந்த தொகுதியின் உதவி செலவு கணக்கு பார்வையாளர் சரவணன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அதிகார துஷ்பிரயோகம், அராஜக அரசியல். இது தான் திராவிட மாடல் !
அ.ராசா பதிவு செய்யும் செலவு கணக்குகளை விட அதிக தொகை செலவிடப்படுவதாக ஆதார பூர்வமாக தான் பதிவு செய்திருப்பதாகவும், தான் அதிகாரபூர்வமாக பதிவு செய்த விவரங்களை தன் அதிகாரத்தை பயன்படுத்தி அழித்து, செலவினங்களை குறைத்து பதிவு செய்ய வற்புறுத்தி தன்னை மிரட்டுகிறார் தேர்தல் அதிகாரியும், நீலகிரி மாவட்ட ஆட்சியருமான அருணா என்று கூறியிருப்பது தி மு க அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டு ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் சரவணன் அவர்கள். உடன் இது குறித்து விசாரித்து தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் தி மு க வின ரின் அராஜகம் அழிக்கப்பட வேண்டும்.