நீட் விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் நேருக்கு நேராக சவால் விட்டு விட்டு வந்த உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் தலைமைக் கழக வழக்கறிஞரான சூர்யா வெற்றிகொண்டான் கூறியிருப்பது, நெட்டிசன்களால் நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
தி.மு.க.வில் தலைமைக் கழக வழக்கறிஞராக இருப்பவர், அக்கட்சியின் மறைந்த ஆபாச பேச்சாளர் வெற்றிகொண்டானின் மகன் சூர்யா வெற்றிகொண்டான். இவர்தான், ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அதாவது, தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழா கடந்த மாத இறுதியில் டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மகனும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்றிருந்தார். அப்போது அவர், பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்ததாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், தி.மு.க. தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் ஒரு தனியார் யூடியூப் சேனல் பேட்டி கண்டது. அப்போது பேசிய சூர்யா, “உண்மையிலேயே தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். புலி 16 அடி பாய்ந்தால் புலிக்குட்டி 32 அடி பாயுமாம். அதுமாதிரி, மோடியை தமிழகத்துக்கு வரவழைத்து இதுதான் வரவு செலவு கணக்கு என்று படம் போட்டுக் காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல, அமைச்சர் உதயநிதி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியிடம் நேருக்கு நேராக சந்தித்து நீட்டுக்கு விலக்கு கேட்டார். பிரதமர் மோடி பல்வேறு காரணங்களைக் கூறி மறுக்கவே, இதை நான் விடமாட்டேன். சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி காண்பேன் என்று சவால் விட்டு விட்டு வந்திருக்கிறார். ஆகவே, அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாமா இல்லையா” என்று கேட்டிருக்கிறார்.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஏன்டா எது எதுக்குத்தான் நோபல் பரிசு கொடுப்பது என்று விவஸ்தை இல்லை என்றும், எது, மோடியிடம் நேருக்கு நேராக சவால் விட்டு விட்டு வந்தாரா என்றும், இதுபோல ஆகச்சிறந்த கொத்தடிமையை யாராவது பார்த்திருக்கிறீர்களா என்றும் நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…