Share it if you like it
எளிய மனிதர்கள் உள்ள கட்சி, நேர்மையானவர்கள் உள்ள கட்சி, என்று இன்று வரை தம்பட்டம் அடித்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள். அண்மையில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸட் கட்சி கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் பினராயி விஜயன் அம்மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின்பு. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தன் மருமகனுக்கு அமைச்சர் பதவியை வழங்கியிருப்பது, அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் ஆளும் ஒரே மாநிலமான கேரளாவும். தி.மு.க போன்று குடும்ப கட்சியாக மாறி வரும் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து வாய் திறப்பாரா? அருணன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it