பா.ஜ.க.வில் இணைந்த தி.மு.க ஊராட்சி தலைவர்.
தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், தலைமை பொறுப்புக்கு வந்த பின்பு அக்கட்சியின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் முன்னேறி கொண்டு வருவதை அனைவரும் பார்த்து வருகிறோம். அந்தவகையில், இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் பா.ஜ.வின் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பலர் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க.வை சேர்ந்த சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள், இன்னாள் கவுன்சிலர் என பலர் பா.ஜ.க.வில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அதேபோல, மாற்றுகட்சியில் இருந்தும் பலர் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டு இருக்கின்றனர். இதுதவிர, ஆளும் கட்சியான தி.மு.க.வில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் வாரிசுகள் பா.ஜ.க.வின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி இருப்பது தான் ஹைலைட்.
அந்தவகையில், தி.மு.க..வின் நீண்ட நாள் உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தாகம் தீர்த்தாபுரம் ஊராட்சி தலைவராக பதவி வகிப்பவர் ஜெயமணி மணிவேல். இவர், தி.மு.க.வில் இருந்து விலகி அம்மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலசுந்தரம் முன்னிலையில் தம்மை பா.ஜ.கவில் இணைத்து கொண்டார். இதையடுத்து, ஊராட்சி தலைவருக்கு பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது பெரும்பாலும் யாரும் விலகி செல்வது கிடையாது. அப்படியே, விலகி சென்றால் கூட எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும் கட்சியில் தான் தங்களை இணைத்து கொள்வது வழக்கம். இதேநிலைதான் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர் தம்மை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டு இருப்பது தான் அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி என்பது மீண்டும் மீண்டும் நிருபணமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்தான செய்தி தினமலரில் வந்துள்ளது.