விடியல் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர்..!

விடியல் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

நாட்டு மக்களின் நன்மையை கருதி மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இன்று வரை வேளாண் சட்டத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. வேளாண் சட்டம் யாருக்கு நன்மை என்பது குறித்து கீழே காண்போம்..

  • புரளி
    பெரிய நிறுவனங்கள் லாபமடையும், விவசாயிகள் இழப்பை சந்திப்பர்
  • உண்மை
    பல மாநிலங்களில், விவசாயிகள் மற்றும் பெரு நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக உற்பத்தி செய்கின்றனர். இப்போது சிறு விவசாயிகளும் இலாப உத்தரவாதம் பெறவிருக்கிறார்கள்.
  • புரளி
    பெரு நிறுவனங்கள் விவசாயிகளை ஒப்பந்தத்தின் பெயரில் சுரண்டுவார்கள்.
  • உண்மை
    எல்லாவித ஒப்பந்தமும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் அளிக்கும். எப்போழுது வேண்டுமானாலும் அபராதம் இல்லாமல் விவசாயி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம்.
  • புரளி
    விவசாயிகளின் நிலங்களை முதலீட்டாளர்கள் ஆக்கிரமிக்க வழி ஏற்படும்.
  • உண்மை
    இந்த சட்டம் விவசாயிகளின் நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ தடை செய்கிறது. ஒப்பந்தம் பயிர்களுக்கு மட்டுமே நிலத்திற்கு அல்ல.
  • புரளி
    இப்பொழுதுள்ள மண்டிகள் மூடப்படும்
  • உண்மை
    சந்தை முறை இப்பொழுது இருப்பது போலவே தொடரும்
  • புரளி
    பில்கள் பாதுகாப்பும் இல்லாதவை, விவசாயிகளுக்கு எதிரானவை.
  • உண்மை
    இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நாடுமுழுவதும் விற்பனை செய்ய முடியும் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து அதிக லாபம் ஈட்ட முடியும்
  • புரளி
    பண்ணை பில்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) அகற்றுவதற்கான சதி
  • உண்மை
    பண்ணை பில்கள் எம்.எஸ்.பி யை பாதிக்காது. எம்.எஸ்.பி அமைப்பு முன்பு போலவே தொடரும்.

இன்னும் ஏராளமான நன்மைகளை கொண்ட புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக  பொய்யான கருத்துக்களை கூறி சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ள விடியல் அரசிற்கு தனது கடும் கண்டனத்தையும், வேளாண் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் பா.ஜ.க தலைவர் நாட்டு மக்களுக்கு விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

Image


Share it if you like it