சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க. அரசிற்கு பகீர் சவால் விடுத்துள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் துபாய் பயணம் மேற்கொண்டார். தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து வருவதற்காக, சென்றதாக ஆளும் தி.மு.க அரசு தெரிவித்து இருந்தது. அந்த வகையில், பிரபல வார பத்திரிக்கையான ஜீனியர் விகடன். துபாய்க்குச் சென்ற 5,000 கோடி, அமைச்சர்களை கண்காணிக்கும் ராஜ்பவன் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஜீனியர் செய்தியை மேற்கொள்காட்டி பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டதை குறித்து, இதே கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சுட்டிக்காட்டி இருந்தார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மேலும், முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில், கருத்து தெரிவித்த பா.ஜ.க. பிரமுகர் அருள் பிரசாத்தை, தமிழக காவல்துறை இன்று கைது செய்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கருத்து சுதந்திரம் பற்றி பேசியவர் இன்று முதல்வர் ஆனபின்பு, அவரின் உண்மையான சுயரூத்தை காட்டியுள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதனை தொடர்ந்து, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது அண்ணாமலை கூறியதாவது; தன்னை பற்றிய வீடியோ இருப்பதாக தி.மு.க.வினர் கூறி இருந்தனர். அப்படி இருந்தால், சன் டி.வி.யில் முதலில் போடும்படி நான் கூறினேன் ஆனால் அவர்கள் போடவில்லை. மேலும், பணம் மிரட்டி வாங்கியதற்கு எவிடன்ஸ் இருக்கு என்று சொன்னார்கள். அப்படி ஆதாரம் இருந்தால் வாங்க ஆளும் கட்சியாக இருக்கும் நீங்கள், உங்கள் காவல் துறையை வைத்து என்னை கைது செய்யுங்கள். அப்படி என்னை கைது செய்யவில்லை என்றால் இனி ஆளும் கட்சி சொல்வதை தமிழக மக்கள் ஒரு பொருட்டாவே எடுத்து கொள்ள மாட்டார்கள் என அண்ணாமலை சவால் விடும் விதமாக பேசியுள்ளார். மேலும், முடிந்தால் என்னை கைது செய் என்னும் ஹேஷ் டேக் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.