திராவிட ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மிகவும் பழமையான கலாசாரத்தைக் கொண்டது. உலகிற்கே, வழிகாட்டியாக தமிழன் கலாசாரம் இன்று வரை இருந்து வருகிறது. இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல, தமிழர்களின் கலாசாரமும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாகவே திகழ்ந்து வருகிறது. உதாரணமாக, இயற்கை முதல் விலங்குகள் வரை தெய்வமாக வணக்கம் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. மேலும், பெண்களையும் கடவுளாக வணங்கும் நடைமுறையும் தமிழகத்தில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், திராவிட கொள்கை மற்றும் கோட்பாடுகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது. கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்று பெயர் வைத்துக் கொண்டு திராவிட கும்பல் செய்யும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமா, வெளிநாட்டில் வசிக்கும் திராவிட கும்பல் ஃபாரின் கலாசாரத்தை கொண்டு வந்து தமிழகத்தில் புகுத்தி வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் திராவிட சீரழிவு தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில், தமிழகம் கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனை மெய்ப்பிக்கு வகையில், இந்த திருமண ஜோடிகள் நடுரோட்டில் பீர் குடித்த காணொளியை குறிப்பிட்டு சொல்லலாம்.