திமுக தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே புகார் : திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு !

திமுக தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே புகார் : திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு !

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தேர்வு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் 6 அதிமுக கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை, திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்த 11 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவியாக திமுகவை சேர்ந்த தேவி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர் இருக்கிறாரே தவிர அவரின் கணவரின் தலையீடு தான் இங்கு அதிகமாக உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றசாட்டை முன்வைத்தனர். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தான் கேட்கிறோம், அதை செய்து தர மறுப்பதோடு உங்களை (கவுன்சிலர்களை) ராஜினாமா செய்ய வைத்துவிடுவோம் என மிரட்டுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

வார்டு உறுப்பினர்களுக்கும் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு நிர்வாகத்திற்கு வந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து முறையிட்டால் கவுன்சிலர்களை இங்கு மதிப்பதில்லை. எங்களது கோரிக்கையை சொன்னால் மனு எழுதி கொடுக்க சொல்லுகின்றனர். எங்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என்று கவுன்சிலர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்ததோடு ஆளுங்கட்சி கவுன்சிலர்களே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து வந்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய வார்டுகளில் எவ்வித அடிப்படை பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் வார்டு பக்கமே போக முடியாத சூழல் இருக்கிறது என கூறி வரும் நிலையில் நாளை பேரூராட்சி மன்றத்தின் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் மாரி, அன்வர் உசேன், பரக்கத் பேகம், ஜெய்பு நிஷா பேகம், தங்கராஜ், சங்கர் கணேஷ், மல்லிகா, தேவி ஆகிய 8 பேர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் முத்து செல்வன், சவுமிபிரியா, மாரிச்செல்வம், தமிழரசி, பேச்சியம்மாள், முருகேசன் ஆகிய 6 பேர் என மொத்தம் 14 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ய முடிவு செய்துள்ளதோடு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அவர் மீது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயன் மற்றும் சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கவுன்சிலர்கள் 14 பேரும் திரண்டு வந்து மனு அளித்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *