கடலூர் மக்களுக்கு  திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – அண்ணாமலை !

கடலூர் மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – அண்ணாமலை !

Share it if you like it

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடலூரில் நடத்தி வருகிறார். அவரை காண மக்கள் பலர் கடலூரில் திரண்டனர். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த ஆட்சியில் கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கீடானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க செலவு செய்த பணம் வீணாகியிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்போறோம் என்று கூறி 30 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். இப்போது அங்கிருந்து இந்த கார் பந்தயம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தமிழகம் முழுவதுமே இதைத் தான் செய்கிறார்கள். தமிழக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.மேலும் கடலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர், கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார். அவர் மீது வழக்கு பதியவே தமிழக பாஜக நிர்வாகிகள் போராட வேண்டிய நிலையில், திமுக ஆட்சியில் நேர்மையான விசாரணை நடைபெற்று அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை.

ஆட்சிக்கு வந்ததும், நெல், கரும்பு, வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்து வழங்குவோம் என்று கூறிய திமுக, நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்லைப் பாதுகாக்க தார்பாய்கள் கூட முழுமையாக வழங்கவில்லை. இது தான் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் லட்சணம். மக்கள் நலனுக்கோ, அவரது வேளாண்மைத் துறையிலோ இதுவரை நிகழ்ச்சிகள் நடத்தாமல், தனது மகனுக்குப் பதவி வாங்க, உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடலூருக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுத்திகரிப்பு ஆலைகள், கொண்டங்கி ஏரி தூர்வாரப்படும், கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி, கைத்தறிப் பூங்கா, காகிதத் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மீன்வளக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு என ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Share it if you like it