சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானம் தொடர்பாக பேசியிருந்தது சர்ச்சையாகி இருந்தது. இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் மார்ச் 4ஆம் தேதி ஆஜராகுமாறு உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரமேஷ் என்ற நபர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு நடந்த 5 மாநில தேர்தலிலும் சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து தொடர்பாக பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களை இணைக்க கோரிய வழக்கில், “நீங்கள் ஒரு சாமானியர் இல்லை, ஒரு அமைச்சர் ; விளைவுகளை தெரிந்து கொள்ள வேண்டாமா ?” இவ்வாறு அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் உதயநிதிக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் நீதிபதி அனிதா சுமந்த் அவர்களை பெண்கள் தினத்திற்கு வாழ்த்து கூறுவதுபோல் தரக்குறைவாக பதிவிட்டுள்ளார் . அந்த பதிவில் ஆரம்ப பள்ளிக்கு வாட்ச்மேனாக இருக்கக்கூடிய தகுதியை வைத்துக்கொண்டு உயர்நீதி மன்றத்துக்கே நீதிபதியாகும் வல்லமை படைத்த பெண்னணுக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் இந்த நபர் தமிழக அரசின் இசை கல்லூரிகளின் ஆலோசகராக திமுக அரசால் நியமிக்கப்பட்டவர். இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்? நீதிபதியை சிறுமைப்படுத்திய இவரை கைது செய்ய உத்தரவிடுவாரா? இந்த நீதிபதி அளித்த தீர்ப்பு தி மு க வுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தி மு க வுக்கு எதிராக செயல்படுகிறாரா? வில்சன் அவர்கள் கூறியது சரியென்றால். இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வில்சன் அவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். என்று எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.