தி.மு.க. தலைமையை விமர்சனம் செய்தும், கிண்டல், கேலி செய்தும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோக்கள் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்த வீடியோ வேற லெவல் என்பதுதான் ஹைலைட். காரணம், இந்த வீடியோ பாடல் அல்ல, ஒரு குட்டிக் கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
முத்தமிழ் முதலை என்பவருக்கு திருடுவதில் அலாதி பிரியமாம். இதற்காக, திருட்டு ரயிலேறி பக்கத்து ஊருக்கு வந்தாராம். அங்கு, முடிந்தளவு கொள்ளையிடித்து விட்டு, கடற்கரையோரமாகப் போய் படுத்துக் கொண்டாராம். அவரது மகன் தத்தி. இவருக்கு 2-ம் 2-ம் நாலுன்னு கூட கூட்டிச் சொல்லத் தெரியாதாம். அதற்கும் துண்டு சீட்டுதான் தேவைப்படுமாம். ஆனா, மணியே பார்க்கத் தெரியாக இவர் கட்டியிருப்பது 3 கோடி ரூபாய் வாட்ச்சாம்.
தத்தியின் மருமகன் லோ பட்ஜெட் பிரசாத் கிஷோராம். இவருதான் தத்திக்கு அரசியல் ஐடியாக்கள் கொடுப்பவராம். இவரு வாட்ச், பெல்ட், ஷூ எல்லாம் பல கோடி ரூபாய்லதான் போடுவாரு. இவரு கட்டியிருக்கிற வாட்ச் 14 கோடி ரூபாயாம். அடுத்த நாம பாக்கப்போற விசித்திர பிறவி செங்கல் சைக்கோ. டோலிக்காக பால்டாயில் குடிச்சவரு, இன்னொரு டோலிக்காக துபாய்ல பங்களா வாங்கிப் போட்டிருக்கிறாரு. இதையெல்லாம் போய் அந்தக் குடும்பத்துக்கிட்ட யாரும் கேட்டுறாதீங்க. ஏன்ன, உங்கள குண்டாஸில் தூக்கிப் போட்ருவாங்க என்று முடிக்கிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிரித்து சிரித்து வயிறு புண்ணானதுதான் மிச்சம்.