விடியல் அரசை நரிக்குறவ பெண்கள் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றுவோம் என தி.மு.க தலைவர் கூறியிருந்தார். ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பு அவரது உண்மையான சுயரூபத்தை தமிழக மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
இதனிடையே, நரிகுறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் போதிய அடிப்படைவசதிகள் இல்லை. ஆகவே, இந்த வீடு எங்களுக்கு வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து.
இதனை தொடர்ந்து, நரிகுறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி, முதல்வர் ஐயா பூஞ்சேரி கிராமத்தில் வந்தபோது 12 பேருக்கு ஒரு லட்ச ரூபாய் லோன் கிடைப்பதற்கான செக் கொடுத்தார்கள். பட்டா தருவதாக சொன்னார்கள் எங்களுக்கு வீடு தருவதாக சொன்னார்கள். ஆனால், அதுவும் சரியாக அமையவில்லை. முதல்வர் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் லோனில் இதுவரை யாருக்கும் லோன் கிடைக்கவில்லை. இப்போ, கடை இருந்தாத தான் லோன் கிடைக்கும் என பேங்க் மேனேஜர் சொல்கிறார். எங்களிடம், பேங்க் புக், பாஸ் புக், ஆதார் கார்டு, நலவாரிய அட்டை உட்பட எல்லா ஆதாரமும் இருக்கு சார் என வேதனையுடன் கடந்த சில மாதங்களுக்கு பேசி இருந்தார். இப்படியாக, நரிக்குறவர் மற்றும் இருளர் சமூகத்தை விடியல் அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நரிக்குறவ மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பாரதப் பிரதமர் மோடி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜீன் முண்டா ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கு, முக்கிய காரணம் தமிழக பா.ஜ.க. என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், விடியல் அரசு இதிலும், தனது திராவிட ஸ்டிக்கரை ஒட்டி இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.