தி.மு.க. ஆட்சியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் தரம் மோசமாக இருப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.
உள்ளூரிலிருந்து, அயலூருக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் ஒரே தேர்வாக இருப்பது அரசு பேருந்து. அந்த வகையில், பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசின் கடமை. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்தான, பல்வேறு ஆதாரங்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இலவசமாக, பேருந்தில் பெண்கள் பயணம் செய்யலாம், என தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்து கொள்கிறது. ஆனால், நடத்துனர்களால் பெண் பயணிகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். தமிழகத்தில், நிலைமை இவ்வாறு உள்ளது. ஆனால், இதுகுறித்து எல்லாம் தமிழக ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுவதில்லை. இதற்கு, மாறாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உ.பி. மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்தில், படிக்கட்கள் இல்லை என்று புதிய தலைமுறை செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தது.
விடியல் ஆட்சியில், அரசு பேருந்துகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி முதலில் பேசுவோம். அதன்பின்பு, பிற மாநிலங்களின் குறைகளை விமர்சனம் செய்வோம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதுகுறித்தான பல்வேறு காணொளிகளை புதிய தலைமுறைக்கு அவர்கள் டேக் செய்து வருகின்றனர்.