ஊழல் அமைச்சர்களின் பட்டியல் தயார்: தேதியை சொன்ன பா.ஜ.க தலைவர்!

ஊழல் அமைச்சர்களின் பட்டியல் தயார்: தேதியை சொன்ன பா.ஜ.க தலைவர்!

Share it if you like it

தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விவரங்களை எதிர்வரும் 5-ம் தேதி வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல பத்திரிக்கையான தினமணி செய்தியாக வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ.க அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் மங்கலம் தலைமை வகித்தார். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

பா.ஜ.க ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அதிகமாக அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளர்களிடம் 30, 40 சதவீத கமிஷன் கேட்கின்றனர். இதன்காரணமாக, அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர். சென்னையில் மட்டும் 19 நாட்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டாகும். பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஒரு துறை அமைச்சரின் மீது கூட புகார் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் தி.முக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் புகார்கள், ஊழல் ஆதாரங்களை பா.ஜ.க தலைவர்கள் ஜூன் 5 -ஆம் தேதி மதுரையில் இருந்து வெளியிடத் தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it