பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசின் மீது பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனத்திடம் ஹெல்த் மிக்ஸை கொள்முதல் செய்யத் தயார் என்று அமைச்சர் அந்தர்பல்டி அடித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு, ஆளும் தி.மு.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். இதுதவிர, விடியல் ஆட்சியில் இருட்டில் நடைபெறும் ஊழல் சம்பவங்களை தொடர்ந்து மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறார். இதன் காரணமாக, தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து அழுத்தத்தையும், பயத்தையும் அண்ணாமலை உருவாக்கி வருகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. அந்தவகையில், கொரோனா தொற்று தமிழகத்தில் கோரத் தாண்டம் ஆடிய சமயத்தில், மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி விட்டு, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியை மறுத்தது விடியல் அரசு. இதையடுத்து, களத்தில் இறங்கிய பா.ஜ.க. தலைவர் இன்னும் 10 நாட்கள் தமிழக அரசுக்கு கெடு விதிக்கிறேன் அதற்குள் அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தி.மு.க. அரசு உடனே முன்வந்தது. அதேபோல, திராவிடர் கழகம் கொடுத்த அழுத்தம் காரணமாக 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கும், தனது கடும் கண்டனங்களை முன்வைத்தது மட்டுமில்லாமல், நானே நேரடியாக களத்திற்கு வருவேன் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார் உடனே, மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி திடீரென பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினார்.
இப்படியாக, திமு.க. அரசின் தவறுகளை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அந்த வகையில், ‘கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்காக தமிழக அரசு விடுத்த 450 கோடி ரூபாய் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த டெண்டரில், ஆவின் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தி.மு.க.வின் தில்லாலங்கடி தனத்தை அம்பலப்படுத்தினார்.
இந்த நிலையில், ‘ஹெல்த் மிக்ஸ் பொருளை ஆவின் நிறுவனத்திடம் வாங்கி கொள்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்தர்பல்டி அடித்திருக்கிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இதிலும் ஊழல் நடந்திருக்குமோ என பொதுமக்கள் கேள்வி மேல் கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.