திண்டிவனத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்க அத்துமீறிய தி.மு.க.வினர் குவியும் கண்டனங்கள்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று டிஜிடல் பேனர்களை வைத்து இருந்தார். அந்தவகையில், பேனர் சரியாக கட்டப்படாததால், பள்ளிக்கரணை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ 23 என்பவர் மீது பேனர் விழுந்தது. இதையடுத்து, சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்தவகையில், அவரது பின்புறம் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது எறியதில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
இதையடுத்து, தி.மு.க தலைவரும் அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார். இதையடுத்து, ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாநிலத்தில் “பேனர் கலாச்சாரத்தை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்தவிவகாரம், குறித்து எனது கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருக்கிறது. எனவே, தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பேனர் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என உறுதிபட கூறியிருந்தார். ஸ்டாலின் கூறிய இந்த கருத்திற்கு தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள், பத்திரிக்கைகள், நெறியாளர்கள் வரவேற்று இருந்தனர். இதுதவிர, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க.வின் மீது வீண் பழியை சுமத்தி இருந்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
எதிர்க்கட்சியாக இருக்கும் வரை தான் நாங்கள் இஷ்டத்திற்கு வாக்குறுதி கொடுப்போம். ஆளும் கட்சியாக மாறிய பின்பு எது பற்றியும் எங்களுக்கு கவலையில்லை என்பது போல தி.மு.க அரசு தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அந்தவகையில், திண்டிவனத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்று நெடுஞ்சாலையில் அலங்கார வளைவுகளை தி.மு.க.வினர் வைத்து இருக்கின்றனர். இச்சம்பவத்திற்கு, பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து கமுக்கமாக கழக கண்மணிகள் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினர் காவல்துறையின் அனுமதியுடன் பேனர் மற்றும் அலங்கார வளைவுகளை வைத்து இருந்தனர். இதற்கு, தமிழக ஊடகங்கள் தங்கள் மனம் போன போக்கில் விவாதம் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வண்ணம் கதறி இருந்தனர். ஆனால், தி.மு.க ஆட்சியில் எ.வ.வேலுவை வரவேற்க அமைத்து இருந்த அலங்கார வளைவுகள் குறித்து இன்று வரை எந்த ஒரு ஊடகவியலாரும் ஏன் வாய் திறக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.