தொண்டனை இலையை தொட  அனுமதிக்காத அண்ணாமலை… கனிமொழியின் தலையை சுத்தம் செய்த தி.மு.க. நிர்வாகி!

தொண்டனை இலையை தொட அனுமதிக்காத அண்ணாமலை… கனிமொழியின் தலையை சுத்தம் செய்த தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

தி.மு.க. ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளர் பத்ம பிரியா கனிமொழியின் தலையை சுத்தம் செய்ததை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கலைஞர் நூற்றாண்டு விழாவாக இந்த வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி மற்றும் தமிழக இயல் இசை நாடக கழகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் துரை. வீரமணி தலைமையில் அண்ணா பூங்காவில் 100 கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்ள வருகை தந்த எம்.பி கனிமொழிக்கு பொய்க்கால் குதிரை கலைஞர்கள், பறை இசை கலைஞர்கள் ஆகியோர் மலர்களை தூவி வரவேற்றனர். விழா மேடை வரை வழி நெடுகிலும் பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். இதனால், கனிமொழி தலையில் பூக்கள் நிறைந்திருந்தன. இதையடுத்து, தி.மு.க. மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழியின் தலையில் இருந்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து சுத்தப்படுத்தினார். ஒரு கட்டத்தில் தன்னால் இதற்கு மேல் முடியாது என்று டி.ஆர்.பாலு. கருதினார்.

இதனை பின்னால் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பத்ம பிரியா தானே முன்வந்து கனிமொழியின் தலையை சுத்தப்படுத்தினார். இதனை, தி.மு.க. எம்.பி. கனிமொழி எப்படி அனுமதிக்கலாம். தனது கட்சி நிர்வாகியை மதிக்கும் விதம் இதுதானா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஊர் ழுழுக்க சுயமரியாதை பாடம் நடத்தி வரும் கனிமொழிக்கு இது அழகா? என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு தொண்டர் தனது வீட்டுக்கு சாப்பிட வரவேண்டும் என்று அழைத்திருக்கிறார். அதன்படி, அங்கு சென்று சாப்பிட்ட அண்ணாமலை தான் சாப்பிட்ட இலையையும், தனக்கு குடிப்பதற்கு தண்ணீர் வைத்த கப்பையும் தானே எடுத்துச் சென்று அகற்றினார். நாம் எங்கு சாப்பிடச் சென்றாலும், சாப்பிடும் வீட்டில் இருப்பவர்கள்தான் இலையை எடுப்பது வழக்கம். நிகழ்ச்சி என்றால், அங்கு இலை எடுப்பதற்கென்றே தனியாக ஆள் இருக்கும். அப்படி இருந்தும், அண்ணாமலை தான் சாப்பிட்ட இலையை தானே எடுத்துச் சென்று அகற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இதுதான், பா.ஜ.க.விற்கும் தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தியத்தேவன் on Twitter: "@Mr08689664 ...
Narikuravar Community,காரம் கொஞ்சம் தூக்கல்: சிறுமி அழைப்பை ஏற்று உணவு உண்ட  முதல்வர்! - chief minister mk stalin provided various welfare assistance  for narikuravar community people - Samayam Tamil
நரிக்குறவர் வீட்டில் நாடகம் நடத்திய ஸ்டாலின்.
Image

Share it if you like it