இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்தையும் தி.மு.க குடும்பத்தையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மீம்ஸ்கள்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது அங்கு விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு, பசி, பஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக கொதித்து போய் உள்ளனர். அந்தவகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்கொடி உயர்த்தி வருகின்றனர். இப்போராட்டம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் ஒரு கட்டத்தில் உள்நாட்டுக் கலவரமாக வெடித்தது.
இதன்காரணமாக, பிரதமர் ராஜபக்சேவின் வீட்டுக்கு பொதுமக்கள் ’தீ’ வைத்தனர். இதுதவிர, 15 அமைச்சர்களது வீடுகளையும் தீயிட்டு கொளுத்தி தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததையொட்டி ராஜபக்சே குடும்பத்தினர் தங்களது மாளிகைகளில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பி செல்ல முயன்ற காணொளி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குடும்ப ஆதிக்கம், பதவி வெறி, ஊழல் காரணமாக இந்த நிலைமைக்கு அந்நாடு சென்று விட்டதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கையில் தற்பொழுது நிகழ்ந்து வரும் சம்பவங்களையும், தமிழகத்தில் சன் குடும்பம் அரசியலில் செலுத்தி வரும் ஆதிக்கத்தையும் மையமாக வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களையும், அது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.