கொசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்ததாக மேயர் பிரியா உளறி கொட்டிய காணொளி ஒன்று தற்போது வைராலகி வருகிறது.
வடக்கிழக்கு பருவக்காற்றால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அந்த வகையில், உரிய நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பல்வேறு இடங்களில், மழை நீர் முழுமையாக வடியவில்லை. இதன்காரணமாக, ஏழை எளியவர்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். மேலும், தங்களுக்கு உரிய நிவாரண பொருட்களை தி.மு.க. அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டினையும் முன்வைத்து வருகின்றனர். இப்படியாக, தமிழகத்தின் நிலை இருந்து வருகிறது. இருப்பினும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தமிழக ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுஒருபுறம் இருக்க, தேங்கிய மழைநீரால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
விடியல் ஆட்சியின் நிலைமை இவ்வாறு இருக்க, சென்னை மேயர் பிரியா பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறியதாவது ; மண்டலம் 6-க்கு உட்பட திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள 6 வட்டத்திற்கும் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ’கொசு வழங்கும் திட்டத்தை’ துவக்கி வைத்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கொடுமைகளை நாங்கள் அனுபவித்து வரும் போது எதற்கு தனியாக ’கொசு வழங்கும் திட்டத்தை’ அமைச்சர் துவக்கி வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.