அரசு மருத்துவனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் பந்து வீராங்கனை பிரியா உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதுதவிர, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இன்றுவரை இருந்து வருகிறது. எங்கும் லஞ்சம், எங்கும் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசு மருத்துவமனையால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவி ஒருவர் உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா 17. இவர், பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது கால் மூட்டு சவ்வில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், பிரியாவுக்கு கால் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டு போடப்பட்டிருக்கிறது. அந்த கட்டு இறுக்கமாக போடப்பட்டதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தொற்று முற்றி அவர் உயிர் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே பிரியாவின் மரணத்திற்கு காரணம் என அவரது பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, பிரியா தனது வாட்ஸ் அப்பில் இறுதியாக வைத்த ஸ்டேடஸ் இதோ.
நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு. நான் சீக்கிரம் ரெடி ஆகிட்டு கம் பேக் கொடுப்பேன்.
எதற்கும் வறுத்த பட வேண்டாம். என்னோட மாஸ் என்டரியை கொடுப்பேன்.
என் விளையாட்டு என்னை விட்டு போகாது. நீங்க நான் திரும்பி வர வேண்டும் என நம்பிக்கையா இருக்கிங்க. என் நண்பர்களையும், என் குடும்பத்தையும் நேசிக்கிறேன் என குறிப்பிட்டு ள்ளார்.
பொதுமக்களுக்குதான் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் தி.மு.க. அரசு திணறி வருகிறது என்றால் தற்போது மக்களுக்கு உயிர் பயத்தையும் இந்த அரசு காட்டி வருகிறது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.