மழை வெள்ளத்தில் மக்கள் திண்டாடி வரும் சூழலில், குடும்பத்துடன் திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்து கொண்டு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார்.
மக்கள் போதும் போதும் என்று கதறும் அளவிற்கு பல்வேறு வாக்குறுதிகளை விடியல் அரசு நிறைவேற்றி வருகிறது. அந்தவகையில், பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என அதிரடியாக பல்வேறு வரிகளை விதித்துள்ளது. இதன்காரணமாக, ஏழை, எளியவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, வடக்கிழக்கு பருவமழை தமிழகத்தை புரட்டியெடுத்து வருகிறது. அந்த வகையில், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் கிடைத்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்படியாக, தமிழகத்தின் நிலைமை இருந்து வருகிறது.
இதனிடையே, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பால்விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
சென்னையில் மக்கள் வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கடைக்கு போய் ஒரு பொருளும் வாங்க முடியாமல், ஒரு டீ குடிக்க வழியில்லாமல் தவித்திருக்க, முதலமைச்சரோ இந்த வாரம் ரிலீசான “லவ் டுடே” படத்தை மனைவியுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.