போதிய வகுப்பறை இல்லாத காரணத்தினால் மாணவர்களை மாடிப்படிகளில் அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டபுத்தூரில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எனினும், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், 6 – ஆம் வகுப்பு மாணவர்களை மாடிப்படிகளில் அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான், திராவிட மாடல் பள்ளியா? என சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, தமிழக அரசு சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடத்தில் ரம்மி விளையாடுவது எப்படி? என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் விவகாரம் கல்வியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி என்பது குறிப்பிடத்தக்கது.