பிரியாவின் மரணம் குறித்து திரை உலக போராளிகள் இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் நலன் சார்ந்த மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லலாம். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த திட்டங்களையும், சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பல மேதைகளும், அறிஞர்களும் பாராட்டியுள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசின் திட்டங்களுக்கு, தி.மு.க. ஆதரவு நடிகர்கள் இன்று வரை தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நீட் தேர்விற்கு நடிகர் சூர்யாவும் அவரது தம்பியுமான கார்த்திக் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்தாலும் இயக்குனர் ரஞ்சித், நடிகர் சத்திய ராஜ், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டவர்கள் உடனே கருத்து தெரிவித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவர்களின், தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. திறனற்ற தி.மு.க. அரசின் தோல்வியை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே குரல் கொடுக்க ஓடி வரும் நடிகர்கள் தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த அநியாயம் குறித்து எப்போது? பேசுவார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.