தி.மு.க. நிர்வாகியின் காரை இரவல் வாங்கி கொண்டு திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருக்கிறது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆரம்பத்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில், தினசரி எங்காவது ஒரு மூளையில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, கழக கண்மணிகளின் அட்டூழியங்களும், அடாவடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. நிர்வாகியான கொக்கி குமார் என்பவர் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, இவரது காரை இரவல் வாங்கி கொண்டு அவரது நண்பர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு.
வேலங்குடி பைபாஸ் சாலையில் வசித்து வருபவர் செல்வகணபதி. இவர், தனது வீட்டில் 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போய்விட்டது என்று காவல்துறையில் புகார் அளித்து இருக்கிறார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து இருக்கின்றனர். நள்ளிரவில், காரில் வந்த மர்ம நபர்கள் அக்கம் பக்கம் நோட்டமிட்டு வீடு புகுந்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த கார் தி.மு.க. நிர்வாகியான
கொக்கி குமார் என்பவருடையது என தெரியவந்தது. அவரிடம், விசாரணை செய்ததில் தனது நண்பரான பானா வயலை சேர்ந்த கார்த்திகேயனுக்கு காரை இரவலாக கொடுத்ததாகவும் இந்த திருட்டிற்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும், நான் ஒரு அப்பாவி என்று கூறியுள்ளார்.