தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் கையை காவலர் ஒருவர் பிடித்து இழுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கு, மிக முக்கிய காரணம் மது மற்றும் கஞ்சா விற்பனை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொரு, மாவட்டத்திலும் உள்ள காவல்நிலையங்களை தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றனர். என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிக கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து விடியல் ஆட்சியில் அரங்கேறி வருகின்றன.
இதுஒருபுறம் இருக்க, தமிழக காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் பெருத் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல, அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அமைந்துள்ளது என்பதே கசப்பான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில், வாகன சோதனை எனும் பெயரில், இரு சக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் கையை காவலர் ஒருவர் பிடித்து இழுத்துள்ளார். இச்சம்பவத்தை, நேரில் பார்த்த பொதுமக்களில் ஒருவர் நடுரோட்டில் காவலரிடம் கடும் வாக்குவாதம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிப்பறி கொள்ளையர்கள் போல சோதனை எனும் பெயரில் போக்குவரத்து காவல்துறையினர் மக்களிடம் நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.