மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தபடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கீழ்கண்ட காணொளி அமைந்துள்ளது.
நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான மற்றும் நீண்டகால அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதே பாரதப் பிரதமர் மோடியின் லட்சிய கனவு. அந்தவகையில், இந்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம், கடந்த 2019 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ம் தேதி அறிமுகம் செய்யபட்டது. அந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில், சுமார் 3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டன. கொரோனோ பெரும் தொற்று இந்தியாவில் உக்கிரமாக பரவிய சமயத்தில் கூட 5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இத்திட்டம், மாநில அரசுகளுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக, வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய மாநிலங்களில் 7-வதாக குஜராத் மாநிலம் அண்மையில் இணைந்தது. இதற்கு, முன்பு கோவா, தெலங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் டாமன் டையு ஆகியவை இந்த சாதனையை படைத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் விடியல் ஆட்சியில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம். அதன் லிங்க் இதோ.