என் அம்மாவை பொட்டலம் போட்டு கையில் கொடுத்தார்கள் அப்பாஸ் கொதிப்பு!

என் அம்மாவை பொட்டலம் போட்டு கையில் கொடுத்தார்கள் அப்பாஸ் கொதிப்பு!

Share it if you like it

1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெடிகுண்டு விபத்தில், தனது அன்னையை இழந்த அப்பாஸ் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில், 16 தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தனது அன்னையை இழந்த மகன் ஒருவர் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

பத்து வயதில் இருந்தே அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்து கொண்டு இருக்கோம். உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று கவர்னர் காலம் தாழ்த்தி விட்டதாக சொல்லி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பை விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. 31 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார் என்று  சொல்கிறார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து பாருங்க என்று சொல்பவர்களுக்கு என்னை போல 16 தமிழ் குடும்பம், அம்மா அப்பா இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரமே சின்னா பின்னமாகி, இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

அவர்களை பற்றி நினைத்து பார்த்தீர்களா? இதற்கு, ஒரே காரணம் கவர்னர் காலம் தாழ்த்தியது தான். இதற்கு, ஆயிரம் காரணம் இருக்கலாம். தமிழக சட்ட சபையில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து இவர்கள் யோசித்து பார்த்தார்களா? எங்களுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. உச்சநீதிமன்றம் வேண்டுமானால் தீர்ப்பு வழங்கி அவர் வெளியே வந்திருக்கலாம்.

ஆனால் ஆண்டவன் தீர்ப்பு இருக்கு. நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்கள் வலி, வேதனை சும்மா இல்லை. என் பத்து வயதில் அம்மாவை பொட்டலாம் போல கையில் கொடுத்தார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு என்ன நியாயம்? இருக்கு. இந்திய பிரதமரை கொலை செய்தால் வெளியில் வரலாம். இதுதான், நாட்டின் உண்மையான தீர்ப்பா? இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருக்கேன். நிறைய போராட்டம் பண்ணி இருக்கேன் என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it