ட்விட்டர் ஸ்பேஸில் தி.மு.க.வை மிக கடுமையாக சாடி இருக்கிறார் சவுக்கு சங்கர். தற்போது, இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சவுக்கு கூறியதாவது ;
கருத்து சுதந்திரம் பேசும் நீங்கள், நாங்கள் இப்படி தான் செய்வோம் என்று ஏன்? நீங்கள் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். கோழையை போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். ஒரு அரசாங்கம் வந்து தனி மனிதன் மீது அடக்குமுறையை ஏவி விடுவது உங்களுக்கு அவமானமாகவும், ஆபாசமாகவும் தெரியவில்லையா. ஒரு எதிரி எந்த மாதிரியான ஆயுதத்தை எடுக்கிறான் என்பதை பொறுத்து அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, கோ பேக் மோடி என்று கருத்து தெரிவித்த என் மீது வழக்கு போட வேண்டும் என பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகளை காவல்துறையினர் அணுகி இருக்கின்றனர். ஸ்டாலின் கோ பேக் மோடி என்று சொல்லவில்லையா? உதயநிதி கோ பேக் மோடி என்று சொல்லவில்லையா? நான் மட்டும் தான் கோ பேக் மோடி என்று சொன்னேனா. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்த ஒரு ட்வீட்டை பயன்படுத்த.
இதற்கு, ஒரு அரசு இயந்திரம் வேறு. காவல்துறை, மாநகர காவல் ஆணையர் அவருக்கு கீழ் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் எல்லாம் படித்த அதிகாரிகள் தானே நான் ஒரு தனி மனிதன். உங்களுக்கு கீழ் தானே நான் பணியாற்றினேன். என்னை விரட்டி விரட்டி கைது செய்ய வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சிறையில் இருக்கும் போது தான் படித்தேன். உங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் எவ்வளவு ஆபாசமாக பேசினார். தி.மு.க.வின் டி.என்.ஏ.வே இப்படி தான் என கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.