ரூ. 360 கோடி மதிப்பு மிக்க கோகைகன் தி.மு.க. கவுன்சிலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டு 16 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. எனினும், மக்கள் விரும்பும் ஆட்சியாக இந்த அரசு இல்லை என்பதே நிதர்சனம். எங்கு பார்க்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் வழிப்பறி என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருந்து வருகிறது. இதுதவிர, லஞ்சம் லாவண்யம் தலைவிரித்து ஆடும் நிலையில் உள்ளது.
இது ஒருபுறம் என்றால், தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களின் அக்கப்போர் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 19-வது வார்ட் தி.மு.க. கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் மற்றும் அவரது சகோதரர் ஜெயினுதீயின் இருவரும் இணைந்து ரூ.360 கோடி மதிப்பு மிக்க கோகைனை கடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தான, செய்தியினை தினமலர் தனது பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. ஆதாரம் இதோ.