நிலங்களை கைப்பற்றியே தீருவோம் அமைச்சர் அடம்: சாவியை தொலைத்த போராளிகள்!

நிலங்களை கைப்பற்றியே தீருவோம் அமைச்சர் அடம்: சாவியை தொலைத்த போராளிகள்!

Share it if you like it

விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி சாலைகளை அமைப்போம் என அமைச்சர் ஏ.வ.வேலு அடம் பிடிப்பது போல பத்திரிகையாளர்களிடம் உறுதியாக கூறியிருக்கிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர், சென்னை – சேலம் இடையே எட்டு வழிசாலை திட்டத்தை செயல்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழக அரசின் இந்த முடிவிற்கு மத்திய அரசு பக்க பலமாக இருந்தது. எனினும், இத்திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக எதிர்த்தார்.

இத்திட்டத்தால், ஏழை எளியவர்கள் தங்களது விவசாய நிலங்களை இழப்பர். ஆகவே, இதனை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க. ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. ஸ்டாலின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தங்களை சுற்றுசூழல் ஆர்வலர்களாக காட்டிகொள்ளும் பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், எட்டுவழிசாலைக்கு எதிராக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சீப்பு செந்தில் போன்ற நெறியாளர்கள் அவதூறு செய்திகளை மக்களிடம் பரப்பி வந்தனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது இவ்வாறு கூறினார் ;

அரசாங்கத்தைப் பொறுத்தவரை பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத் தான் அறிவிப்புகளை வெளியிடுகிறோம். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியமானது தான். புதிய நலத்திட்டங்கள், புதிய சாலைகள் கட்டமைப்புகளால் அரசு பயன் அடைவது கிடையாது, மக்கள் தான் பயனடைகின்றனர். நகரப்புறங்களில் நெரிசல்களைக் குறைப்பதற்காகத்தான் புறவழிச் சாலைகளை உருவாக்குகிறோம். இப்படி, அரசு நலத்திட்டங்களை நிறைவேற்ற நிலங்களைக் கையகப்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் எட்டுவழிசாலைக்கு எதிராக வானத்திற்கும் பூமிக்கும் குதித்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்ன? கூற போகிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it