குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற அம்மாநில தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் கோட்டையான குஜராத் சட்டமன்ற தேர்தல் கடந்த டிச., 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன் தேர்தல் முடிவுகள் இன்று டிச., 8 வெளியானது. பெரும்பான்மைக்கு தேவையான 92 இடங்களை தாண்டி 157 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தமிழரிடம், பிரபல ஊடகமான தந்தி டிவி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார் ;
இங்கு எந்த ஒரு பிரச்சனையுமின்றி சுமூகமாக வாழ்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் 1984 மற்றும் 2002 ஹிந்து முஸ்லீம் பிரச்சனை இருக்கும். 2002 -க்கு பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மக்கள் வியாபாரம் செய்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தமிழர்கள் இங்கு நன்றாக உள்ளோம். அரசு அலுவலகத்திற்கு நாங்கள் சென்றால் கட்சி பிரச்சனையும், அரசியல் தலையீடும் இருக்காது.
இந்தியாவிலேயே மோசமான மாநிலம் தமிழகம் தான். குஜராத்தில் எம்.பி. எம்.எல்.ஏ.வை எளிதில் பார்க்க முடியும். ஆனால், தமிழகத்தில் அவர்களை பார்ப்பது மிகவும் சிரமம் என்று கூறியுள்ளார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.