காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்கு உதயநிதி வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என பீட்டர் அல்போன்ஸ் பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக இருப்பவர் பீட்டர் அல்போன்ஸ். இவர், சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியோடு கர்மவீரர் காமராஜரை ஒப்பிட்டுள்ளார்.
பீட்டர் கூறியதாவது ;
காமராஜருக்கு கிடைத்த வாய்ப்பு என்னவெனில், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மக்களுக்கு உழைக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரத்திற்கு முன்னால் போராட்டத்திற்கும். சுதந்திரத்திற்கு, பின்னால் இந்தியாவை கட்டமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல, நேரு மற்றும் வல்லபாய்க்கு கிடைத்தது. சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட வ.உ.சி., பாரதியார் போன்றவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையெல்லாம், வைத்து கொண்டு சட்டம் பேச முடியாது.
இதுயெல்லாம், சின்ன விஷயம் இதனை அரசியல் ஆக்குவதே அநாகரீகம். அரசியலமைப்பு படி உதயநிதி தகுதியானவர். இன்று அமைச்சர் ஆகியிருக்கிறார். நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அவர், முதலமைச்சரும் ஆகலாம் யாரும் அதனை தடுக்க முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதான் ஒரு மனிதருடைய திறமைகளை பார்க்க முடியும். நிச்சயமாக, உதயநிதிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தி.மு.க. சொல்லும் திராவிட மாடல் என்பது காந்தியத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. காமராஜர் ஆட்சி என்பதும், திராவிட மாடல் என்று முதல்வர் சொல்வதும் ஒன்றுதான். காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்கு உதயநிதி வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.