நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழக ஊடகங்களை ராணுவ வீரர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடமிருந்து இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்தவகையில், பிரியாணி பொட்டலம், புடவைகள் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி கழக கண்மணிகள் ஆட்களை பிடித்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்.
இதையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படத்தை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியாக, ”நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மக்கள் மீது தி.மு.க அரசு திணித்து வருகிறது. இதற்கு, தமிழக ஊடகங்களும் ஆகா, ஓகோ என்று சிறப்பான விளம்பரம் செய்து வருகின்றது.
இந்நிலையில், தமிழக ஊடகங்களை ராணுவ வீரர் ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது;
சுஜீத் எனும் சிறுவன் உயிர் இழந்த பொழுது மூன்று நாட்கள் டேரா போட்டு டெலிகாஸ்ட் செய்தீர்கள். தமிழக மக்கள் யாரையும் தீபாவளி கொண்டாட முடியாத அளவிற்கு துக்க மனநிலைக்கு கொண்டு சென்றீர்கள். ஐயோ பிஞ்சு குழந்தை உள்ளே போய்விட்டதே என்று அனைவரையும் பதற்றத்தில் வைத்திருந்தீர்கள். ஆனால், அந்த குழந்தையின் தந்தை செய்த தவறால் தான் அது போய்விட்டது. ஒரு குழந்தை உயிர் போய்விட்டதே என ஒட்டு மொத்த மக்களும் கண்ணீரில் இருந்தார்கள். இன்றைக்கு, கல்குவாரியில் நிறைய பேர் தனது கணவனை, தனது அப்பாவை இழந்து தவித்து கொண்டு இருக்கிறார்கள். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என நிறைய பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு மீட்பு பணிகள் தாமதமாகி கொண்டு இருக்கு, அதை பற்றி நீங்கள் போர போக்கில் செய்தி போட்டு இருக்கிறீர்கள். இப்போ, என்னவென்றால் எல்லா செய்தியிலும் ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்திற்கு ரீவ்யூ கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். இதை எப்படி நடுநிலை ஊடகம் என்று சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் பணத்தை வாங்கி கொண்டு ஒரு நபரை புகழ்ந்து பேச செயல்படுகிறீர்களா? தயவு செய்து நடுநிலை ஊடகம் என்று சொல்லதீர்கள். சம்பளத்திற்கு ஒரு குடும்பம் சார்பாக வேலை பார்க்கிறேன் என்று சொல்லுங்க என தமிழக ஊடகங்களை கழுவி ஊற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.