சூட்டிங் நடப்பதாக கூறி கிராம மக்களை ஊருக்குள் செல்ல அனுமதி மறுத்த சன் புரொடெக்ஷனுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம், அடாவடி, ரவுடித்தனம் மற்றும் கட்டபஞ்சாயத்து தலைவிரித்து ஆடி வருகிறது. கழக கண்மணிகளில் தொடங்கி கட்சியின் உயர்மட்ட பொறுப்பில் உள்ள தலைவர் வரை அப்பாவி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றனர் என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. கவுன்சிலர்கள் செய்யும் அட்டூழியங்களே சிறந்த உதாரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பத்திரிகைத்துறை, சினிமாத்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. சன் குடும்பத்தையோ அல்லது அந்த கட்சியையோ யாரேனும் பகைத்து கொண்டால் அவர்களது எதிர்காலம் என்ன? ஆகும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படியாக, தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி விடியல் அரசு தொடர்ந்து துஷ்பிரயோகங்களை செய்து வருகின்றது.
இப்படிப்பட்ட சூழலில், காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் புரொடக்ஷன் சூட்டிங் நடப்பதால், ஊருக்குள் கிராம மக்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்ல விடாமல் அடாவடி செய்த சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், யாரோ ஒருவர் துணிச்சலாக அங்கு நடந்த அட்டூழியத்தை தனது செல்போனில் காணொளியாக பதிவு செய்துள்ளார். இந்த காணொளிதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆதாரம் இதோ.